கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய ஸ்கேன் | Fetal Echocardiogram என்றால் என்ன?


பொதுவாக பெரியவர்களுக்கு இதய எக்கோ ஸ்கேன் எடுப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்,

கருவில் இருக்கும் சிசுவின் இதய வளர்ச்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் ஒரு செயல்முறையே Fetal Echocardiogram ஆகும்.

எதற்காக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹார்ட் ஸ்கேன் பார்க்க வேண்டும் ? எப்போது பார்க்க வேண்டும் ?

குழந்தை வயிற்றில் இருக்கும் போது 4 முதல் 5 மாதங்களுக்குள் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஸ்கேன் பார்க்க வேண்டும். கருவில் இருக்கும் சிசுவின் இதய வளர்ச்சி சரியாக இருக்கிறதா அல்லது அதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை 4 முதல் 5 மாதங்களுக்குள் தான் துல்லியமாக பார்க்க முடியும். ஒருவேளை இதய வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் , பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து அந்த குடும்பத்திற்கு தேவையான கவுன்சிலிங் அளிப்பது மற்றும் குழந்தை பிறக்கும்போது தேவையான முன்னேற்பாடுகள் குறித்து fetal medicine specialist ஆலோசனை தேவை.

Congenital heart disease உடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அவசியம் தேவை. பதினெட்டில் இருந்து இருபத்து இரண்டு வாரங்களுக்குள் இந்த ஸ்கேன் செய்யலாம்.

இன்றைய நவீன மருத்துவ வசதி காரணமாக 3 லிருந்து 4 மாதங்களுக்கு உள்ளாகவே இந்த ஸ்கேனை செய்யும் நவீன கருவிகள் இருக்கின்றன.

ஏன் Fetal Echo Scan சீக்கிரமே பார்க்க பரிந்துரைக்கப் படுகிறது?

இதே ஸ்கேனை ஏழு அல்லது எட்டு மாதங்களிலும் செய்யலாம் ஆனால் குழந்தை பெரிதாக வளர்ந்த பின்பு அதன் இதய வளர்ச்சி துள்ளியமாக பார்ப்பது கடினம்.

Fetal Echo ஸ்கேன் செயல்முறையில் என்னவெல்லாம் பார்க்க முடியும்?

  • குழந்தையின் இதயம் சரியான பொசிஷனில் இருக்கிறதா
  • குழந்தையின் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா
  • Condition of blood vessels arising from respective heart chambers
  • குழந்தையின் இதய அளவு சரியாக இருக்கிறதா
  • குழந்தையின் இதயத்தில் உள்ள துவாரங்கள் அளவு சரியாக இருக்கிறதா
  • குழந்தையின் இதய வளர்ச்சி abnormal ஆக இருக்கிறதா

குழந்தையின் இதயத்தில் பெரிய பிரச்னை ஏதேனும் இருந்தால் அதை கண்டிப்பாக Fetal Echo ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.

இந்த ஸ்கேன் எவ்வளவு நேரத்தில் எடுக்க முடியும்?

பொதுவாக இந்த ஸ்கேன் 15 நிமிடத்தில் முடியக்கூடிய ஒரு செயல்முறை ஆகும்.

இந்த ஸ்கேன் எப்போது பரிந்துரைக்கப்படுக்கிறது?

பொதுவாக இந்த ஸ்கேன் 5 மாத Anomaly ஸ்கேனோடு சேர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது.

One Comment on “கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய ஸ்கேன் | Fetal Echocardiogram என்றால் என்ன?”

  1. My EDD date is 5.5.2022. Now the doctor told me to take an eco test.Can I take an eco test now?

Leave a Reply

Your email address will not be published.